கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையை மகன் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரொனா வைரசை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ, டாக்ஸி இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளா மாநிலத்தின் மருத்துவமனைக்கு சென்று விட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையுடன் மகன் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் செய்வதறியாது திகைத்துப் போன மகன் தனது தந்தையை சுமந்துகொண்டு வீட்டிற்கு சென்றார்.
சென்னையில் 30 முதல் 39 வயதிற்கு உட்பட்டவர்கள் கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் சென்னையில் இதுவரை 205 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ராயபுரம் மண்டலத்தில் அதிக பட்சமாக 63 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள் 28.78% பேர் என்று பெண்கள் 31.22 சதவீதம் பேர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவால் 30 முதல் 39 வயது வரையிலான 44 பேரும், 50 முதல் 59 வரையிலான 39 பேரும், 60 முதல் 69 வயது வரையிலான 21 பேரும், 70 முதல் 79 வயது வரையிலான 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.