சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கவேண்டிய விலங்குகள் குறித்து புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. உகானில் இருக்கும் ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை விலங்குகளிடமிருந்து பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

இறைச்சிக்காக பன்றிகள் கோழிகள், ஆடுகள், மான்கள் விலங்குகள் ஆகியவற்றை வளர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நரி, கீரி பிள்ளை, காட்டேரி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆனால் இறைச்சிக்கு பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா பரவலுக்கு காரணமாக நம்பப்படும் எறும்புத்தின்னி மற்றும் வவ்வால்கள் போன்றவை இந்த பட்டியலில் இல்லை. அதேபோல் பட்டியலில் நாய் இனங்களும் இல்லை.


Leave a Reply