விஜய் நடிக்கும் 64வது படத்தின் பெயர் ‘மாஸ்டர்’

விஜய்யின் 64 ஆவது படத்திற்கு மாஸ்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். சென்னையில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் நிலையில் அந்த படத்திற்கு மாஸ்டர் என தலைப்பு வைத்துள்ளனர். விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துக் கொண்டிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

இன்னும் சில தினங்களில் மாஸ்டர் திரைப் படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.


Leave a Reply