காதலர்கள் முத்தம் கொடுப்பது சாதாரண விஷயம் : எஸ்.ஏ சந்திரசேகர்

காதலர்கள் முத்தம் கொடுப்பது சாதாரண விஷயம் என்று திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய அவர் இது பாலியல் தொடர்பான படம் என்று கூறப்படுவது தவறான தகவல் என்றும், குழந்தையின்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்றும் தெரிவித்தார்.

 

முன்னோட்ட காட்சிகளில் இடம்பெற்ற அனைத்தும் திரைப்படத்தில் இருப்பதாகவும் யாரையும் ஏமாற்றி படத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். காதலர்கள் முத்தம் கொடுப்பது சாதாரண விஷயம் அதை பாவம் போல் பார்க்கிறார்கள் என்றும் இயக்குனர் சந்திரசேகர் கூறினார்.


Leave a Reply