--- --:--:-- --

விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் இடம் எங்கே?

1

விஜயகாந்த் உடல் நாளை தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு இன்று காலை நுரையீரல் அழற்சி ஏற்பட்டு மூச்சு விடமுடியாமல் திணறி வந்தார்.

 

கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.

 

விஜயகாந்த் வாசலில் காத்திருந்த தொண்டர்கள், அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து முதலமைச்சர் நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

நாளை மாலை 4:45 மணியளவில் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நாளையும் அஞ்சலி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon