இன்று தங்கம் விலை என்ன..?
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்ததால் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கடந்த 2- 3 நாட்களாக தங்கம் விலை தலைகீழாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. நேற்று பிப்ரவரி 2ஆம் தேதி நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இது இப்படியே உயருமா, அல்லது மீண்டும் சரியுமா என்றே பலரும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர். அதன் படி இன்று பிப்ரவரி 3ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.112,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,010க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





