--- --:--:-- --

விஜயகாந்தின் மரணம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது – ரஜினிகாந்த்

1

விஜயகாந்தின் மரணம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது என ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

 

திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக இன்று மதியம் 1 வரை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

 

நேற்றே ஷூட்டிஙகை நிறுத்திவிட்டு சென்னை வந்த ரஜினிகாந்த் இன்று அவரது நண்பருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தின் மரணம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது. விஜயகாந்த் ஒரு அசாத்திய நல்ல மன உறுதி கொண்ட மனிதர். எப்படியும் உடல் நிலை தேறி மீண்டு வருவார் என எதிர்பார்த்தேன்.

 

சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்த்த போது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து இருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்துவிட்டனர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon