--- --:--:-- --

விஜய் ஒரு சிங்கம்… நான் சீண்டுவேனா? – உமாபதி ராமையா

10

ட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டி.என். 2026 (தங்க நட்சத்திரம் 2026) திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நையாண்டித் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம், வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் அரசியல் குறித்து கிண்டலடித்துள்ளதாக விமாசிக்கப்பட்டு வருகிறது.

 

நடிகர் தம்பி ராமையாவின் கதை மற்றும் வசனத்தில், அவரது மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியான சில மணிநேரங்களிலேயே, ஒரு முன்னணி நடிகரின் (த.வெ.க தலைவர் விஜய்) அரசியல் வருகையை மறைமுகமாகத் தாக்குவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.

 

குறிப்பாக, தமிழக அரசியலில் தடம் பதிக்கும் ஒரு முக்கிய நடிகரின் அரசியல் லட்சியங்களைக் கேலி செய்யும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாகக் கூறி, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படக்குழுவினரை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாகப் பல விவாதங்களும், ட்ரோல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, படத்தின் இயக்குனர் உமாபதி ராமையா விளக்கம் அளித்துள்ளார்.

 

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் உமாபதி ராமையா பேசுகையில், “இந்தப் படம் எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக எடுக்கப்பட்டது அல்ல. யாரையும் அவமதிக்கும் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. மக்கள் யாரைக் குறிப்பிடுகிறார்களோ, அவர் ஒரு ‘சிங்கம்’ போன்றவர். சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா? எனவே, தேவையற்ற அரசியல் விவாதங்களை உருவாக்க வேண்டாம். இந்தப் படத்தை ஒரு திரைப்படமாக மட்டும் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

 

‘டி.என். 2026 (தங்க நட்சத்திரம் 2026) ஒரு தேர்தல் களத்தை மையமாகக் கொண்ட அரசியல் காமெடித் திரைப்படமாகும். ஒரு திரையுலகப் பிரபலம் அரசியல் கட்சி தொடங்குவதும், அதைத் தொடர்ந்து நடக்கும் சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். நட்டி நட்ராஜ், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, ஸ்ரீதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. கற்பைனயான ஒரு கதையை நகைச்சுவை உணர்வுடன் சொல்லியிருப்பதாகவும், ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து கதையை ரசிக்குமாறும் படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon