வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய தேரோட்ட திருவிழா!
ஆலங்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாடு முத்துமாரியம்மன் கோவிலானது, இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்முடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, இந்த கோவிலின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வானவேடிக்கையுடன் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்ட திருவிழாவில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு மற்றும் அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனின் தேரை பக்தி பரவசத்தோடு இழுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.





