அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியிலிருந்து உதயநிதி விலகல்..!
2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் அலுவல் சாரா உறுப்பினராக மூன்று ஆண்டுகள் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.





