--- --:--:-- --

தண்டவாளத்தில் விளையாடிய குடும்பத்தினர்… திடீரென வந்த ரயில்

4

அமெரிக்காவில் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குடும்பத்தினர் அதிவேகமாக வந்த ரயில் மோதுவதில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிராங்கிளின் கவுண்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள ரயில்வே பாலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது சிலர் அங்கிருந்து சென்று விட இரண்டு, மூன்று சிறு குழந்தைகளுடன் இளைஞரொருவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்தது. இதனை கண்டு பதற்றமடைந்த குழந்தைகள் அங்கும் இங்கும் சிதறி ஓடின.

 

அப்போது அந்த இளைஞர் ஓடிச் சென்று குழந்தைகளை காப்பாற்றி ரயிலில் இருந்து சற்று தொலைவில் ஒதுங்கினார். ரயில் கடந்து சென்றதும் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Leave a Reply

Right Menu Icon