கிரகப்பிரவேசத்திற்காக சென்ற தொழிலதிபர்..மகன் கண் முன்னே வெறிச்செயல்..!
தஞ்சாவூரில் பட்டப் பகலில் மகனின் கண் முன்னே டிராவல்ஸ் உரிமையாளர் பாபு என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் சோளிங்கநல்லூரை சேர்ந்த பாபு காரைக்காலில் டைமண்ட் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று காலை நண்பர் வீட்டின் சுப நிகழ்விற்காக மகனுடன் காரில் தஞ்சாவூர் சென்றவரை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது.
தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் முருகேசன், சிவகுமார், சத்யராஜ் ஆகியோரிடம் விசாரணை பெற்று வருகிறது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை தேடி வருகின்றனர்.





