புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்: மோகன்
புதுச்சேரி பா.ஜ.க மாநில செயலாளர் வில்லியனூரில் மோகன் குமார் வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இங்கு இரட்டை என்ஜின் அரசை மக்கள் விரும்புகின்றனர். அனைவரும் ஒரு வளர்ந்த புதுச்சேரிக்காக வாக்களித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியைப் பெறவே பொதுமக்கள் விரும்புகின்றனர். இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்றார்.





