இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப்பில் பெறலாம்..!

கொரொனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை எளியமுறையில் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான பிரத்யேக முறையை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கியுள்ளது.

 

இதற்காகவா 90131 51515 என்ற பிரத்யேக எண்ணை செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்-அப் செயலியில் சர்டிஃபிகேட் என டைப் செய்தால் நமது மொபைல் எண்ணிற்கு ஓ‌டி‌பி எண் வரும். அதனை வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும்.

 

சில நொடிகளில் சான்றிதழ் பெற வேண்டுமெனில் ஒன்றை டைப் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் அப்படி ஒன்றை டைப் செய்தவுடன் தடுப்பூசி செலுத்தியற்கான சான்றிதழ் பிடிஎஃப் வடிவில் நமக்கு கிடைத்துவிடும். இதற்காக இடைத்தரகர்கள், இன்டர்நெட் மையங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.