தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 4 வயதுச் சிறுவன் யார்..?

டந்த 15ஆம் தேதி விழுப்புரம் நகர் பகுதியில் தள்ளுவண்டியில் இறந்து கிடந்த 4 வயது சிறுவன் யார் என்பதை கண்டறிய கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவன் உணவின்றி இறந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

 

அதில் 2 மர்மநபர்கள் அந்த சிறுவனை துணியால் மூடி விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து தூக்கி வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அவர்களின் முகம் தெளிவாக தெரியாததால் அவர்களை தேடிப் பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

 

உயிரிழந்த சிறுவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வழங்கப்பட்ட அங்கன்வாடி மைய சீருடை அணிந்து இருந்ததால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.