தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் தளர்வுகளுடன்டன் கூடிய ஒரு ஊரடங்கு முடிவடைகிறது.
இதனால் அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓமிக்ரான் அச்சத்தால் முழு ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகளுடன் தற்போதைய ஊரடங்கு நீட்டிப்பு என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் 27-ஆம் தேதி அல்லது 28 ஆம் தேதி தமிழகத்தின் ஊரடங்கு குறித்த முக்கிய முடிவு எடுக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். டெல்டா கொரொனா குறைந்து வரும் நிலையில் மெல்ல மெல்ல ஓமிக்ரான் தொற்று இந்திய அளவில் உயர்ந்து வருகிறது.