இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான யமுனா நதியில் தண்ணீர் முழுவதும் கருப்பு நிறமாக மாறியுள்ளது. மேலும் சனிக்கிழமை ஆறு முழுவதிலும் முறை மிதந்து வந்ததால் கவலை அடைந்துள்ள டெல்லி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
60 சதவீத குடிநீர் தேவை யமுனா நதி மூலமாக பூர்த்தி செய்யப்படும் நிலையில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளால் தான் யமுனா நதி மாசடைந்து உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.