பாம்பை கொண்டு ஸ்கிப்பிங் செய்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் இளைஞர் ஒருவர் பாம்பை பயன்படுத்தி ஸ்கிப்பிங் செய்யும் காட்சியை வெளியாகியுள்ளது.
அதில், அந்த இளைஞர் கையில் ஒரு பாம்பை லாவகமாக பிடித்தபடி எவ்வித தயக்கமும் பயமும் இன்றி மிகுந்த ஈடுபாடுடன் ஒரு தார் சாலையின் நடுவே நின்று அசத்தலாக ஸ்கிப்பிங் செய்கிறார்.
சில வினாடிகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்த பிறகு அந்த பாம்பை சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை ஓரத்தில் வீசிவிட்டுச் செல்கிறார். அதன் பின்னர் தான் அந்த இளைஞரின் கையில் இருந்தது செத்துப் போன பாம்பு என்று தெரிய வந்தது.