தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை படத்தின் அப்டேட் வாங்கி தருகிறேன் என நகைச்சுவையாக பதிலளித்த வானதி..!

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை படத்தின் அப்டேட்டை வாங்கித் தருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவில் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி ஸ்ரீனிவாசன் களம் காண்கிறார்.

 

இந்த நிலையில் அவரிடம் ட்விட்டரில் வலிமை அப்டேட் எப்போது என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை படத்தின் அப்டேட் கிடைக்கும் தம்பி என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.