ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. கொரொனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் கொரொனாவின் உருமாறிய வடிவமான ஓமிக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவங்கி உள்ளது.
5 முதல் 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கிரீஸ் நாடுகளில் சிறுவர்களுக்கான கொரொனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.