நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழப்பு..!

ஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர். இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.

 

வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்றத்திற்கு குறைந்த அளவிலேயே மக்கள் வந்திருந்தனர். குண்டு வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

மேலும் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.