மயங்கி விழுந்த மாணவரை தோளில் சுமந்து சென்ற காவலர்..!

ள்ளக்குறிச்சியில் மயங்கி விழுந்த பள்ளி மாணவரை தோளில் சுமந்து சென்ற தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்க்க உதவிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர் புத்தக பையுடன் மயங்கி விழுந்தார்.

 

சுதாரித்து எழுந்த மாணவரை அந்த பகுதியில் இருந்த காவலர்கள் மீட்டு விசாரித்தனர். மாணவன் மிகவும் சோர்வாக காணப் பட்டதால் அவருடைய புத்தக பையை மற்றொரு காவலர் பிடித்து கொள்ள காவல் உதவி ஆய்வாளர் மாணவரை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

 

உரிய நேரத்தில் மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.