திருநங்கையாக மாறிய மகனை அடித்துக் கொலை செய்த தாய்..!

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை கொலை செய்த தாய் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கணவரை பிரிந்து மகனுடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார். நவீன்குமார் தனது பெயரை அக்ஷிதா என மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே வீட்டின் அருகே இருந்த முட்புதரில் காயங்களுடன் கிடந்த நவீன்குமார் அவரது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தாயே மகனை கொலை செய்தது தெரியவந்தது. திருநங்கையாக மாறியது பிடிக்காததால் அவருக்கு ஊசி போட்டு பழைய நிலைக்கு மாற்றுவதாக தாய் கூறியுள்ளார்.

 

ஆனால் நவீன்குமார் ஒப்புக் கொள்ளாததால் தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு அவனை அடித்து வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றதாகவும் உமாதேவி தெரிவித்துள்ளார். அப்பொழுது நவீன்குமார் இறந்துவிட்டதாக கருதி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

ஆனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் இருந்த அவரை அவரது தாய் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தனக்கு தொடர்பு இல்லாதது போல நாடகமாடியது தெரியவந்தது.