தினமும் ரசம் வைத்ததால் மனைவியை கொலை செய்த கணவன்..!

சாப்பாட்டுக்கு தினசரி ரசம் வைத்ததாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. கண்ணன் என்பவர் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

சம்பவத்தன்று குடிபோதையில் மதியம் சாப்பிடும்போது ரசம் வைத்துள்ளதாக கூறி தகராறில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் கட்டையால் மனைவியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் உத்தரவிட்டது.