கேக்கில் மெர்ரி கிறிஸ்துமஸ் என எழுதித் தர மறுத்த பேக்கரி..! கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பெண்..!

பாகிஸ்தானில் கேக்கில் மெர்ரி கிறிஸ்மஸ் என எழுதித் தர மறுத்த பேக்கரி ஊழியர் குறித்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

கராச்சியில் உள்ள ஒரு பகுதியில் கேக் வாங்கிய பெண்வாடிக்கையாளர் மெர்ரி கிறிஸ்மஸ் என எழுதித்தர ஊழியரிடம் கேட்டதாகவும் அதை ஊழியர் மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

 

இது கண்டனத்திற்கு உள்ளானது. ஊழியரின் செயலுக்கு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக பேக்கரி நிர்வாகம் கூறி உள்ளது.