அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..! தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு..!

கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டாண்ட் சாலையில் உள்ள ரயில்வே வணிக வளாக கட்டிடத்தில் ஏராளமான கடைகள், அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில் 13வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது சில தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் லிப்டில் மாடிக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

 

லிப்ட்டில் சிக்கிக்கொண்ட 4 தீயணைப்பு வீரர்கள், 2 காவலர்கள், ஒரு ரிசர்வ் படை வீரர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். நிகழ்விடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.