பள்ளியில் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே செல்லும் ஆசிரியர்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு அரசுப் பள்ளியில் கையெழுத்து போட்டுவிட்டு நான்கு ஆசிரியர்கள் பணியில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

 

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவருக்கு அந்த பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராதது தெரியவந்தது. மேலும் ஆய்வு செய்தபோது தினமும் 30 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுப்பெடுத்து இருந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து முதன்மை கல்வி அலுவலரின் ஆய்வில் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே சென்றவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளையும் வீடியோ மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.