சன்னி லியோன் மன்னிப்பு கேட்டே ஆகணும்…!

ன்னி லியோன் மன்னிப்பு கேட்க கோரி சில இந்து அமைப்புகள் கிளம்பியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோனுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.

 

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது பல படங்களில் டான்ஸ் ஆடியுள்ளார். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் நடனமாடிய மதுபானா என்கிற ஒரு பாடல் ரிலீசாகி உள்ளது.

 

அந்த பாட்டில் சன்னி லியோன் கவர்ச்சியாக டான்ஸ் ஆடியுள்ளாராம். இந்த பாடலுக்கு சன்னிலியோன் டான்ஸ் ஆபாசமாக இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் இருக்கும் இந்து மத தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.