பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு…!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்று அரசு உதவி பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட போதிலும் சாமர்த்தியமாக பேருந்தை ஓரம்கட்டி பெரும் அசம்பாவிதத்தை தடுத்துள்ளார்.

 

31 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து ஹேமநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்து திருத்தணி பைபாஸ் ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் சாலையோரமாக நின்ற வாகனங்கள் மீது மோதிய வாரே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பயணிகளின் முயற்சியால் வலிப்பு வந்த ஓட்டுநர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.