கல்லூரியில் சேர இயலாத சோகத்தில் மாணவி தற்கொலை..!

ஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கல்லூரியில் சேர இயலாத சோகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி அருகே துறையூரில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற துளசி தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில் பொறியியல் அல்லது வேளாண் கல்லூரிகளில் சேர முயன்றுள்ளார்.

 

நீட் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டிய கட்டணம் பாக்கி இருந்ததால் அவர்கள் ஏற்கனவே பெற்ற துளசியின் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நீட் தேர்வு தோல்வியாலும், சான்றிதழ்கள் இல்லாத காரணத்தாலும், கல்லூரியில் சேர முடியாத நிலை காரணமாகவும் துளசி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

இதனையடுத்து பெற்றோர் யாரும் வீட்டில் இல்லாத சமயத்தில் துளசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.