நடிகை மீரா மிதுனை கைது செய்யக்கோரி போராட்டம்..!

டிகை மீரா மிதுனை கைது செய்யக்கோரி சென்னை அம்பத்தூரில் வழக்கறிஞர்கள், துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முன்னணி நடிகர், நடிகைகள் மீது அடிக்கடி குற்றச்சாட்டுகளை அடுக்கியும், தலித் சமுதாயம் பற்றியும், இயக்குனர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

 

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை உடனடியாக கைது செய்யக்கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.