ரசிகர்கள் அன்பால் மேடையிலேயே கண்ணீர் விட்ட சாய்பல்லவி..!

ஷ்யாம் சிங்காராய் படத்தில் நடிகர் நானியுடன் நடித்திருக்கும் நடிகை சாய்பல்லவி. அந்தப் படத்தினுடைய ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷனிற்கு வந்த சாய்பல்லவி அழுதுள்ளார்.

 

கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவரும் கதாநாயகிகளுக்கு நடுவில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் முழுக்க முழுக்க நடிப்பு, நடனம் மற்றும் தன்னுடைய டேலன்ட்டில் மட்டும் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் சாய் பல்லவி.

 

ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷனிற்கு வந்த சாய்பல்லவியைப் பார்த்து மலர் டீச்சர், சுமதி, அராத்து ஆனந்தி என அவர் எடுத்த படங்களின் கேரக்டர்கள் பெயரை ரசிகர்கள் கூறி வந்துள்ளனர்.எனவே ரசிகர்களின் அன்பால் அவர் மேடையிலேயே கண்ணீர் விட்டுள்ளார்.