டிக் டாக் செயலி தடை நீக்கமா?

சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் பரிசீலனை ஏதும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஹலோ, விசார்ட், டிக் டாக் உள்ளிட்ட 267 செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் அதன் மீதான தடையை அகற்றுவதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என மக்களவை உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு எழுத்துபூர்வ பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் தடையை நீக்குவதற்கான பரிசீலனை செய்யப்பட மாட்டாது என்றார்.