தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா மந்தனா..!

டிகை ராஷ்மிகா மந்தனா மன்னிப்பு கேட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போஸ்ட் செய்துள்ளது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா.

 

கீதாகோவிந்தம் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, சுல்தான் படத்தில் பாசிலுக்கு ஜோடியாக நடித்தார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். புஷ்பா படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அதற்கு ராஷ்மிகா வரவில்லை.

 

அதற்காக தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா அன்பு சென்னை மக்களே புஷ்பா படத்தோட வெற்றி விழாவுக்கு என்னால் சென்னை வர முடியவில்லை. இதற்காக ரொம்ப வருத்தப்பட்டேன், பரவாயில்லை, கவலைப்படாதீங்க. ரொம்ப சீக்கிரமா நிஜமாகவே உங்கள் அனைவரையும் மீட் பண்ண போறேன் அன்புடன் ராஷ்மிகா மந்தனா என போஸ்ட் செய்துள்ளார்.