கொரொனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்படும்..!

மிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வழங்கப்படும் கொரொனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி இந்த நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

 

முன்னதாகக் ]கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் பிரதமர் மோடி படம் இடம் பெற்றது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்து இருந்தது.

 

இதையடுத்து தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் படத்தை நீக்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தேர்தல் ஆணையம் கடந்த 6ஆம் தேதி தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக பிரதமரின் படத்தை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.