குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண்குழந்தை சாலையோரம் போட்டு எரிப்பு..!

சேலம் மாவட்டத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தையை சாலையோரம் வீசி எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு ஆண் குழந்தை சாலையோரம் போட்டு எரிக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.