பொங்கல் பரிசு தொகுப்பு உடன் பரிசு தொகையை வழங்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 22 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பரிசு தொகுப்பில் கரும்பு விடுபட்டு இருந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பொருட்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள நிலையில் அதன் பரிசுத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டது.
திமுக பொறுப்பேற்ற பிறகு முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.