சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை..!

ட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 

அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் காவல்துறையினர் வாகன சோதனை உள்ளிட்ட கூடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

பதற்றமான பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் முடியும்வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். அவசர தேவை தவிர்த்து விடுமுறை இல்லை என காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.