ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை தீவிரம்..!

மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்கள் மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இதில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நால்வரை பிடித்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் விருதுநகர், சாத்தூர், திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.