மக்கள் 11 நாட்களுக்கு சிரிக்க மது அருந்த தடை..! வடகொரிய அரசு அறிவிப்பு..!

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது எனவும் வட கொரிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வட கொரிய நாட்டை கிம் ஜாங் இன் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு காலமானார்.

 

அதை தொடர்ந்து இவருடைய கடைசி மகனான கிம் ஜாங் உன் அதிபராகி தற்போது வரையில் மூன்றாவது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் தனது தந்தை கிம் ஜாங் இன் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.

 

இதனால் வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது, மது அருந்தக் கூடாது எனவும் மற்றும் பிறந்தநாள் விழாவை கொண்டாட கூடாது எனவும் வடகொரிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.