ஒட்டகங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர்கள்..!

வுதி அரேபியாவில் ஒட்டக அழகிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப்போட்டி என்ற பல்வேறு போட்டிகளை கேள்வி பட்டிருப்போம். ஆனால் ரியாத் பாலைவனத்தில் வித்தியாசமாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் விதிகளை மீறி ஒட்டகங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக 43 ஒட்டகங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

 

மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் ஈடுபட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப் படுவது தான் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.