இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி அளித்து ஹரியானா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உருமாற்றம் அடைந்த கொரொனா ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஹரியானாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
18 வயது நிரம்பிய மாணவர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.