இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200ஆக உயர்வு..!

ந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறையின் தரவுகளின்படி அதிக அளவாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 84 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தெலுங்கானா மாநிலத்தில் 20 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 19 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

ராஜஸ்தான், கேரளா, குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் என 12 மாநிலங்களில் ஓமிக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தொற்று குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மூன்றாம் அலையை சமாளிக்க இந்தியா முழு அளவில் தயாராக இருப்பதாகவும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.