இன்னும் 2 மாதங்களில் ஓமிக்ரான் உச்சமடைய வாய்ப்பு..!

2 மாதங்களில் 300 கோடி பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதியவகை கொரொனா உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் இன்ஸ்டிடியூட் ஆய்வு நடத்தியுள்ளது.

 

இதில் இன்னமும் இரண்டே மாதங்களில் 300 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது மேலும் தினசரி ஒன்றரை கோடி பேருக்கு தொற்று ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி மாதத்தில் தொற்று உச்சம் அடையும் எனக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.