தமிழகத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி..!

மிழகத்தில் முதன்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்தவருக்கு உருமாறிய ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 47 வயதுடைய அந்த நபர் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் லேசான அறிகுறிகளுடன் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

 

தொற்று உறுதியான நபரின் குடும்பத்தினர் 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அமைச்சர் மா சுப்பிரமணியன். அவர்களுக்கும் ஓமிக்ரான் தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் தொற்று உறுதியான நபரோடு விமானத்தில் வந்தவர்கள் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.