ஜனவரி, பிப்ரவரியில் ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும்..!

ந்தியாவில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓமிக்ரான் தொற்று கணிசமாக அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

நோய் பாதிப்பின் தீவிரம் டெல்டாவை விடவும் குறைவாகவே இருக்கும் என்றும் பெரும்பாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தொற்று முடிவுக்கு வரும் நிலை உள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் டெல்லியை சேர்ந்த மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

 

ஓமிக்ரன் தொற்று எப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வருகிறது எனவும் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்து உள்ளது என்றும் உலக நல்வாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிரம் அடையும் எனவும் இருப்பினும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் மருத்துவ நிபுணர் குறிப்பிட்டார்.

 

தடுப்பூசி மூலம் இந்த பரவலை தடுக்க முடியும் என்பதால் ஓமிக்ரானால் ஏற்படும் பாதிப்புகள் மிதமாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.