திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் கடத்தல்..!

திருப்பூர் அருகே வட மாநிலத் தொழிலாளர்களை கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதீப் குமார் என்பவர் தன் மனைவியுடன் தங்கி அங்கு உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 

பிரதீப் குமார் தனது நண்பர்கள் சதீஷ், பிகிராய், கஞ்சன்முன்னா ஆகியோருடன் சாலையில் நடந்து சென்ற போது திடீரென அவர்களை வழிமறித்த கும்பல் 3 பேரையும் கடத்தி சென்றது.

 

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனிடையே கடத்தல் கும்பல் பணம் கேட்டு அழைத்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது அவர்கள் கேரள மாநில எல்லையில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.