நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரொனா தொற்று குறைந்துள்ளதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் பருவமழை பாதிப்பால் பள்ளிக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பாடத்திட்டத்தை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டம் நடத்த அவகாசம் தரும் வகையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பரவும் தகவலால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.