நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு மனு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

 

மனுவில் தன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி கடந்த மே மாதம், ஆகஸ்ட் மாதங்களில் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என நளினியின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார். இந்த மனு திங்கள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.