இந்தியாவில் இரண்டாவதாக தோன்றியுள்ள மர்மத் தூண்..!

லகின் பல்வேறு நாடுகளில் திடீரென்று தோன்றி பின்னர் மாயமாகும் தூண் இந்தியாவில் இரண்டாவது முறையாக மும்பையில் உள்ள பூங்காவில் தோன்றியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் மர்மத்தூண் பற்றிய செய்திகள் வந்து கொண்டுள்ளன.

 

முதலில் பாலைவனப் பகுதியில் 12 அடி உயரம் கொண்ட தூண் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ருமேனியா, இங்கிலாந்து, நெதர்லாந்,து போலந்து உள்ளிட்ட 30 நாடுகளில் இதுபோன்ற தூண்கள் அடுத்தடுத்து தோன்றி வருகின்றன.

 

தற்போது மும்பை மாநகரில் உள்ள பூங்காவில் மர்மமான முறையில் 7 அடி உயரம் கொண்ட தூண் கண்டறியப்பட்டுள்ளது. தூண்களின் பக்கத்தில் எண்கள் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும் அவை என்னவென்று கண்டுபிடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.